ஹாம்பர்க்: ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டேடிஸ்டா (Statista) நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது.
அடுத்து 29.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை 2-வது இடத்திலும், 25.5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு சீனாவின் பாதுகாப்புத் துறை 3-வது இடத்திலும் உள்ளன.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் 23 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனம் 16.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. சென்ற ஆண்டில் உலக அளவில் 2.1 லட்சம் கோடி டாலர் ராணுவத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் அதிகம் செலவிட்டுள்ளன.