டெல்லி: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான லோக் ஆயுக்தாவின் போலீஸ் விசாரணைக்கு விதித்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களுருவில் மேம்பாட்டு கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஊழல் புகார் எழுந்தது.