பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையை ஒட்டி, வெள்ளிக் கவசம் அளித்துள்ளது, தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அஇஅதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக,
தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த
மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு இறுதியானது என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில், வெள்ளிக் கவசத்தை வழங்கினார். அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கக் கவசத்தை வழங்கியது போல், ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக் கவசத்தை வழங்கியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னுக்கு செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய நிலையில், பசும்பொன்னுக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் மாஸ் காட்டி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். மேலும், பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் கைக்கு விரைவில் அதிமுக வரும் என்றும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள பலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும், அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.