கனடாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கை தமிழர்கள்.
டிரக் ஓட்டுனர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறும் உறவினர்.
கனடாவில் சாலை விபத்தில் இலங்கை தமிழர்களான இருவர் உயிரிழந்த நிலையில் கைதான டிரக் ஓட்டுனர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் Markham நகரில் இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) என்பவரும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) என்பவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காரை பதீரன் ஓட்டியிருக்கிறார். பதீரன் அருகில் உள்ள இருக்கையில் அவர் சகோதரி நெலுக்சனா அமர்ந்திருந்தார். காரின் பின்பகுதியில் அவர்களின் தாயார் ஸ்ரீரதி உட்கார்ந்திருந்தார் என தெரியவந்தது.
இந்த நிலையில் டிரக் ஓட்டுனர் எந்தவித காயமும் இன்றி தப்பிய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டியதாகவும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும் இரு தினங்களுக்கு முன்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Supplied
இது தொடர்பில் பேசிய பதீரனா மாமா சுவின் பூபாலசிங்கம், டிரக் ஓட்டுனர் மீது சமீபத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது வரவேற்கத்தக்க தொடக்கமாக இருந்தபோதிலும் அது உயிரிழந்த இருவரையும் மீண்டும் கொண்டு வர போவதில்லை.
சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், ஏனெனில் வேறு எந்த உயிரையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை.
விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீரதி இன்னும் மருத்துவ ரீதியாக கோமா நிலையில் உள்ளார்.
அவர் முன்னேற்றத்தின் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டினாலும், ஒருபோதும் குணமடையாமல் போகவும் வாய்ப்பு உள்ளது, முழு குடும்பத்தையும் நிலை குலைய வைக்கு தருணம் இது என கூறியுள்ளார்.
இதனிடையில் டிரக் ஓட்டுனர் வரும் நவம்பர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரியவந்துள்ளது.