கன்னியாகுமரியில் கல்லூரி மாணவன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காதலி கிரிஷ்மா காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலையை சேர்ந்த சாரோன் ராஜுக்கு, கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் உறுதியானதையடுத்து காதலி கிரிஷ்மா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடுமங்காடு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் காவல்நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் கிருமி நாசினியை குடித்து கிரிஷ்மா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்ட போலீசார், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.