பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பரத் கல்யாண். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார். கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் அறிமுகமானார். பின்னர் யக்கா,பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜாபோன்ற கன்னடப் படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷ் நடித்த சுள்ளான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மருத்துவமனை ஓனராக நடித்து வருகிறார். இவருக்கு ப்ரியா என்ற மனைவி இருந்தார். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் HRஆக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குடும்பத்தோடு விருகம்பாக்கத்தில் வசித்துவந்தனர்.
#breakingnews
With deep regret informing T K Priyadharshini Bharat Kalyan passed away
She leaves behind Bharath Kalyan Tarun and Nikita
Family was her life! AnMortal remains is now back home in Natesan nagar. Cremation tomorrow morning 11 am. pic.twitter.com/bGkBs3oaKT— PR Sudharshan ( Casting Director & PR ) (@Pr_sudharshan) October 31, 2022
இந்தச் சூழலில் ப்ரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.
ப்ரியா உயிரிழந்ததற்கு காரணம் அவர் பேலியோ டயட்டில் இருந்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு டயாபடிக் அதிகமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பேலியோ டயட் இருந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் மனைவியை இழந்து வாடும் பரத் கல்யாணுக்கு சின்னத்திரை நடிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.