தாய்லாந்தில் சேறு சகதியில் சிக்கித் தவித்த யானை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட காட்சி, இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
உடோன் தானி பகுதியில் சிக்கித் தவித்த யானையை, கிரேன் மூலம் முதலில் மீட்க முயற்சி நடைபெற்றது.
ஆனால் யானை உடல் எடை காரணமாக அந்த முயற்சி தோல்வியடையவே, டிராக்டர் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த வழியே யானை மேலே ஏறி வந்தது.