சீனாவில் லாக்டவுனுக்கு பயந்து தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பியோடிய ஊழியர்கள்!

பீஜிங்,

சீனாவின் செங்க்சோவ் பகுதியில் ஆப்பிள் நிறுவத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவத்தின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட, நகர நிர்வாகங்கள் தீவிர கொரோன தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி கடுமையான ஊரடங்கு அவ்வப்போது அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஐ-போன் தொழிற்சாலையில் உள்ள பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பணியாற்றும் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.செங்க்சோவ் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐ-போன் தொழிற்சாலையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, லாக்டவுனுக்கு பயந்த ஊழியர்கள், தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச்சென்ற வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள பிபிசி செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்டீபன் மெக்டொனெல் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லாக்டவுன் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால், ஊழியர்கள் நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அந்தந்த பகுதி மக்கள், சாலையோரங்களில் உணவு போன்றவற்றை அளித்து உதவுகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.