வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் டுவிட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதம் ரூ.1,600 கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ரூ.3.61 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார்.
இதனையடுத்து டுவிட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயற்சித்து வருகிறார். அதன்படி, நேற்று (அக்.,30) வெளியிட்டுள்ள பதிவில், ‘டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மைதன்மை, தரத்தை மதிப்பீடு செய்ய, கண்காணிக்க, புதிதாக பதிவுகள் மதிப்பீட்டு குழு அமைக்கப்படும்’ என, எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பிரபலமானவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ வழங்கப்படுகிறது. இந்த ப்ளூ டிக் வசதிகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘ப்ளூ டிக்’ கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் இந்திய மதிப்பில் மாதம்தோறும் ரூ.1600 செலுத்த வேண்டும் என அறிவிக்க உள்ளனர். அதுபோல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட வணிக ரீதியான பயன்பாடுகளுக்கும் டுவிட்டரில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement