தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

நாளை சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.