தமிழக அரசு தீவிரவாதத்தை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை – கேஎஸ்.அழகிரி

தமிழக அரசு தீவிரவாதத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கேஎஸ்.அழகிரி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி வருகை தந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுபினர் ஏகப்பவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்…
கோவை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. பாஜக கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சம்பந்தப் பட்டவர்கள் என்பது தேசிய புலனாய்வு பிரிவுக்கு தான் தெரியும். அவர்கள் விசாரணை செய்து உறுதி படுத்தினால் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். தேவையில்லாமல் ஒரு அரசை குறை சொல்லக் கூடாது. தீவிரவாதிகளுக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
image
வழக்கை தாமதிப்பதாக எவ்வாறு கருத முடியும். ஆளுநர் அரசியலமைப்பின் பிரதிநிதி. அவ்வாறு குற்றச்சாட்டு கூறுவது தேவையற்றது. தமிழக காவல்துறை, தேசிய புலனாய்வு பிரிவு இணைந்து தான் விசாரணை செய்து வருகிறது. இதனால் ஆதாரங்கள் அழிக்க பட்டு விட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. இந்திய எல்லைக்கு உள்ளே தீவிரவாதிகள் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்து தாக்குதல் நடத்திய போது எப்படி பிரதமர் மீது குற்றசாட்டு சொல்ல முடியும்,
அதுபோல தற்போது விசாரணை நடைபெறும் சமயத்தில் தேவையற்ற உண்மைக்கு மாறான சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மத்திய அமைச்சர்கள் மாவட்டங்களில் ஆய்வு செய்வது மக்களின் பணத்தை விரயம் செய்வது. ஆய்வு செய்வதற்கு என்று உரிய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது இந்த ஆய்வு எதற்கு. இது பாஜகவிற்கு முக்கியத்துவம் கொடுக்க செய்யும் வேலையாகும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.