தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்


சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 15 நாட்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் தீர்வு

தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல் | Driving License Sri Lankan Peoples

சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் ஆறு இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. 

இந்தநிலையில், அதற்கான அட்டைகளை ஒஸ்ரியாவில் இருந்து இறக்குமதி செய்ய  தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.