தொடர் மழை எதிரொலி: பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ஏரிகள் நிரம்பியது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியால் 10 ஏரிகள், 2அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் மற்றும் விசுவக்குடி, கொட டரை என 2 அணைக்கட்டு கள் உள்ளன. இந்நிலை யில் தமிழகஅளவில் அதிக மழைப்பொழிவை தரக்கூ டிய வடகிழக்கு பருவமழை நேற்றுமுன்தினம் (29ம்தேதி தொடங்கியுள்ளது. இருந்தும் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண் டல மேலடுக்கு சுழற்சி நில வுவதால் தமிழக அளவில் பரவலாக நல்ல மழை பெ ய்து வருகிறது.

இதன் கார ணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்க ளாக நல்லமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சை மலையில்தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கல்லாறு, வெள்ளாறு, கூட்டு மருதையாறு, சு வேதாநதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதன் காரணமாக நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் முதலில் வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூரில் உள்ள பெரிய ஏரி நிரம்பி வழிந்தது.

இதனைத் தொடர்ந்து வடக்கலூர் ஏரி, லாடபுரம் பெரிய ஏரி, நூத்தப்பூர் ஏரி, வடக்க லூர் அக்ரஹாரம் ஏரி, வெண்பாவூர் ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, கீரவாடி ஏரி, அகரம் சீகூர்ஏரி, ஒகளூர் ஏரி ஆகிய 10 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி வழிகின் றன. கீழப்பெரம்பலூர் ஏரி 90 முதல் 99 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ளது. பெரம்ப லூர் கீழஏரி, துறைமங்கலம் பெரியஏரி, ஆய்க்குடி ஏரி, அரும்பாவூர் சின்ன ஏரி, வயலூர் ஏரி ஆகியன 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. பெர ம்பலூர் மேல ஏரி, பாண்டகப்பாடி ஏரி, கைபெரம்பலூர் ஏரி ஆகிய ஏரிகள் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

கிழுமத்தூர் ஏரி, கிளியூர் ஏரி, பெரியம்மா பாளையம் ஏரி, பெருமத்தூர் ஏரி, பெண்ணக் கோணம் ஏரி, ஆண்டி குரும் பலூர் ஏரி ஆகியன 51 சதவீ தம் முதல் 70 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. துறைமங்கலம் சின்ன ஏரி, எழுமூர் ஏரி, செங்குணம் ஏரி, வி.களத்தூர் சின்ன ஏரி, வெங்கனூர் ஏரி, தொ ண்டமாந்துறை ஏரி, குரும்ப லூர் ஏரி, அரணாரை ஏரி, நெற்குணம் ஏரி, மேலப்புலி யூர் ஏரி, லாடபுரம் சின்ன ஏரி, காரை பெரிய ஏரி, நா ரணமங்கலம் ஏரி, வரகுபா டி ஏரி, அரசலூர் ஏரி வெங் கலம் பெரிய ஏரி, வி. களத் தூர் பெரியஏரி, கீரனூர்ஏரி, அத்தியூர் ஏரி, கீழப்புலியூர் ஏரி ஆகியன 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிர ம்பியுள்ளன. கைகளத்தூர் ஏரி, பில்லாங்குளம் ஏரி, பொம்மனப்பாடி ஏரி, காரை சின்னஏரி உள்ளிட்ட 28 ஏரி கள் 25 சதவீதத்திற்கு கீழாகவே நிரம்பி உள்ளன.

நிரம்பி வழியும் அணைக்கட்டுகள்
தொடர்மழைக்கு ஆலத்தூர் தாலுக்காவில் மருதையா ற்றின் குறுக்கெகட்டப்பட் டுள்ளகொட்டரை நீர்த்தக் ம் தனது முழு கொள்ளளவான 212.47 மில்லியன் கனஅடி அளவை 100 சதவீதம் எட்டியதால் நிரம்பி வழி கிறது. வேப்பந்தட்டை தாலு க்கா அன்னமங்கலம் ஊரா ட்சி விசுவக்குடி அருகே கல் லாற்றின் குறுக்கே கட்டப் பட்ட விசுவக்குடி அணைக் கட்டில் தற்போது ரேடியல் ஷட்டர் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. 10.30 மீட்டர் உயரமுள்ள இந்த அணைக்கட்டில் தற்போது 7.90 மீட்டர் தண்ணீர் உள்ளது.

அதாவது 43.42 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டில், 25.07 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பியுள் ளது. தொடர்ந்து பச்சைமலை மேல் இருந்து தண்ணீர் விசுவக்குடி அணைக்கு சீராக வந்து கொண்டிருப்பதால் அணையின் பாது காப்பு கருதி தண்ணீர் ரேடி யல் ஷட்டர் வழியாக தா னாக வெளியேற்றப்பட்டு வெங்கலம் ஏரிக்கு செல்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.