நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்
பிரபல டிவி நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியா(43) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
90களில் பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பரத் கல்யாண். பாட்டாளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னை, விருகம்பாக்கத்தில் குடும்பத்தினர் உடன் வசித்து வருகிறது. இவரது மனைவி பிரியா. கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் இவர் அவதிப்பட்டு வந்தார். கோமாவில் கூட இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(அக்., 31) காலை அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரியாவின் சகோதரி வெளியூரில் உள்ளார். அவர் வந்ததும் நாளை இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. பரத் கல்யாண் – பிரியா தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.