நடிகை சமந்தாவை தாக்கிய அரிய வகை நோய்! இது பற்றி உங்களுக்கு தெரியுமா?


 நடிகை சமந்தா சமீபத்தில் மயோசைட்டிஸ் (Mayositis) என்றும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

 அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பல முன்னணி பிரபலங்களும் அவர் மீண்டு வர தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். 

 இந்தநிலையில் இந்த மயோசைட்டிஸ் நோய் என்பது என்ன? இது எதனால் வருகின்றது? இதற்கு என்ன சிகிச்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம். 

நடிகை சமந்தாவை தாக்கிய அரிய வகை நோய்! இது பற்றி உங்களுக்கு தெரியுமா? | Actress Samantha Hit Unknown Disease

மயோசைட்டிஸ் நோய் என்றால் என்ன?

  மயோசைட்டிஸ் நோய் என்பது பல்வேறு காரணங்களால் தசைகளில் ஏற்படும் வீக்கமாகும். இது அரிதாக ஏற்படும் நோயாகும்.

இதில் dermatomyositis, inclusion-body myositis, juvenile myositis, polymyositis, toxic myositis என பலவகை உள்ளது.  

யாரை அதிகம் தாக்கும்? 

இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் பாதிக்கும். மேலும், ஆண்களை விட பெண்களையே இந்த நோய் அதிகமாக பாதிக்கிறது. 

அறிகுறிகள் 

  • தசை வலி
  • தசைகளில் பலவீனம்
  •  உடல் எடை குறைவது
  •  உடல் சோர்வு
  • உடலின் வலி காய்ச்சல்
  • உணவு விழுங்குவதில் சிரமம்

காரணங்கள் என்ன? 

   காயம் மற்றும் தொற்று உள்ளிட்டவையும் காரணமாக அமைகிறது. மேலும், ஆட்டோ இம்யூன் நோய்கள், எச்ஐவி , சளி, காய்ச்சல் உள்ளிட்டவைக்கு காரணமாக இருக்கும் வைரஸ்கள், மருந்துகளால் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மை போன்றவையே இந்த நோய் ஏற்பட காரணமாக அமைகின்றன.

நோய் பரவியிருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? 

 ஆரம்பக்கட்டத்திலேயே இதை கண்டுபிடிப்பது கடினமாகும். இருப்பினும் மருத்துவர்கள் பின்வரும் முறைகள் மூலம் நோய் பரவியிருப்பதை கண்டுபிடிக்கலாம். 

  • சைகளில் பயாப்சி
  • எலெக்ட்ரோமயோகிராபி
  • மரபுரீதியான சோதனை
  • ஆட்டோ இம்யூன் பேனல் ரத்த பரிசோதனை
  • CPK அளவுகளை உறுதி செய்யும் ரத்த பரிசோதனை
  • மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் இமேஜிங்
  • ஆன்டிநியூக்ளியர் ஆன்டிபாடி ரத்த பரிசோதனை

சிகிச்சை முறை என்ன?  

  • டயட் திட்டம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது.
  • விளைவுகளை குறைப்பதற்காக azathioprine மற்றும் methotrexate போன்ற இம்யூனோ சப்பிரசண்ட் ஸ்டெராய்டுகளை பரிந்துரைக்கலாம்.
  • அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவுத்திட்டத்தில் சேர்த்து கொள்ள வேண்டும்.

 குறிப்பு 

அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து கொள்ளவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.