மதுரை: தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைத்து, நதிகளை இணைக்கக் கோரிய வழக்கில் கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜரானார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உருவாகி அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளில் தடுப்பணை கட்டவும், ஆங்காங்கே நதிகளை இணைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கேரள அரசின் சார்பில் வாதிடுவதற்காக அட்வகேட் ஜெனரல் கோபாலகிருஷ்ண குரூப் ஆஜரானார். இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவ. 21க்கு தள்ளி வைத்தனர்.