டெல்லி: நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு டிஜிட்டல் நாணயம் வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது