காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை’ என்ற பெயரில் நடைப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் தன் பயணத்தை மேற்கொண்டார்.
இதனிடையே ராகுல்காந்தி மீது பா.ஜ.கவைச் சேர்ந்த ப்ரீத்தி காந்தி மோசமான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். தெலங்கானாவில் நடைப்பயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்தனர். அப்போது அவர்களுடன் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை பூனம் கவுரும் இணைந்துகொண்டார்.
His concern , respect and protective nature towards woman is something which touched my heart .
I with the weavers team heartfully thank @RahulGandhi ji for hearing the #weavers issues .#savecraft #saveweavers https://t.co/tJtn1Ta5jT
— पूनम कौर ❤️ poonam kaur (@poonamkaurlal) October 29, 2022
இந்நிலையில் பூனம் கவுர் கைகளைப் பிடித்தபடி ராகுல் காந்தி நடக்கும் படத்தைப் பகிர்ந்து பா.ஜ.க-வின் ப்ரீத்தி காந்தி விமர்சித்திருந்தார். ப்ரீத்தி காந்தியின் இந்த விமர்சனத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது ராகுல் காந்தி கையைப் பிடித்து நடந்தது குறித்து பூனம் கவுரே தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
This is absolutely demeaning of you , remember prime minister spoke about #narishakti – I almost slipped and toppled that’s how sir held my hand . https://t.co/keIyMEeqr6
— पूनम कौर ❤️ poonam kaur (@poonamkaurlal) October 29, 2022
ப்ரீத்தி காந்தியின் ட்வீட்டுக்குப் பதில் அளித்துள்ள அவர், “உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள்கிறீர்கள். #narishakti குறித்து பிரதமர் என்ன சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஸ்லிப்பாகி கீழே விழப்போனதால்தான் ராகுல் காந்தி எனது கையைப் பிடித்தார்” என்று பூனம் கவுர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.