பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலில் விமரிசையாக திருக்கல்யாண விழா நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. பழனி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
