நாக்பூர் : மஹாராஷ்டிராவில், பழைய இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் அமராவதி நகரில் உள்ள பிரபாத் சவுக் என்ற இடத்தில் இரண்டு மாடிகள் கொண்ட குடியிருப்பு இருந்தது.மிகப்பழைய கட்டடமான இது நேற்று மதியம் 2:00 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து, போலீஸ் மற்றும் மீட்புப் படையினர் வந்தனர்.
இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement