பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிரசார வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் உயிரிழந்த நிலையில், பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது நாள் ஹகீக்கி அசாதி நீண்ட பேரணியின் போது, செய்தி சேகரிக்க சென்ற சேனல் 5 என்ற தொலைக்காட்சி சேனலின் பெண் நிருபர் சடாப் நயீம் என்பவர், இம்ரான் கானின் வாகனத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த இம்ரான் கான் தனது பேரணியை ரத்து செய்துள்ளார். விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.