கடித்த பாம்புகளை அடித்து கொல்வது அல்லது வேறு விதமாக பழிவாங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.
ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். காட்டுப்பகுதி என்பதால் அங்கு அதிகமாக பாம்புகள் உலாவுவது வழக்கம்.
அங்குள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வெளியே சென்றிருந்தபோது பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னை கடித்த பாம்பை பிடித்து அதனை இருமுறை கடித்து துண்டாக்கினான்.
பின்னர் வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிகிச்சைக்கு பிறகு சிறுவன் தற்போது நலமாக உள்ளார்.
பாம்பு கடித்தால் அந்த பாம்பை திருப்பி அடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை அந்த பழங்குடி மக்களிடையே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in