பிலிப்பைன்ஸில் 'நால்கே' புயல்: 98 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 5 நாட்களாக நால்கே புயலால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இடைவிடாது பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சூறாவளி காற்றுக்கு வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ள நிலையில், பல வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.

பிலிப்பைன்ஸின் பல நகரங்கள் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்த புயலால் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் 63 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.