பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு… கனேடிய குடும்பம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்


வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார்

சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை

கனடாவின் ஒன்ராறியோவில் ஒரே மகனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்ராறியோவின் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை என குறிப்பிட்டுள்ளனர்.
ஞாயிறன்று இரவு நடந்த இச்சம்பவத்தில், 46 வயது Brian Desormeaux, 43 வயது Janet மற்றும் 17 வயது Ashton ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு... கனேடிய குடும்பம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Sudbury Parents And Son Murder Suicide

From Facebook

உள்ளூர் நேரப்படி மாலை 6.20 மணிக்கு அவசர உதவிக் கேட்டு பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், மூடிக்கிடந்த குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.

இதில் ஒரே மகனுடன் பெற்றோரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.