மீண்டும் இயக்குனராகும் தனுஷ்?
நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‛வாத்தி' படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இயக்குனர் அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார் . தென்காசியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் மழை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்ததும் புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே ப.பாண்டி எனும் படத்தை தனுஷ் எழுதி, இயக்கி இருந்தார் . தற்போது மீண்டும் தனுஷ் இயக்குனராக அடுத்த படத்தை இயக்கி அதில் நடிக்கவும் இருக்கிறார் . இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது .