வங்கி பாதுகாவலரை தாக்கி கட்டி போட்டு கொள்ளை முயற்சி..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இந்தியன் வங்கி கிளையில் காவலரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரும்பாக்கம் கிராமத்தில் உள்ள வங்கியில் இரவு காவலராக பணியாற்றிய ஆப்பேலை நேற்றிரவு அடையாளம் தெரியாத 3 பேர் பின்பக்கமாக வந்து தாக்கி கழிப்பறையில் கட்டிப்போட்டனர்.

பின்னர்  ஜன்னலை உடைக்க முயன்று, அது முடியாததால்,  3 பேரும் திரும்பி சென்றனர்.

காலையில் ஆப்பேலின் முணுமுணுப்பு சத்தம் கேட்டு அவரை மீட்டு, காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.  

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.