சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் இவ்வாண்டு அக்டோபர் வரை மொத்தம் ரூ. 86,566 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரியாக அக்டோபரில் ரூ.10,678 கோடியும், 2022 ஏப்ரல் அக்டோபர் வரை ரூ.76,839 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் அக்டோபரில் ரூ.1,131 கோடியும், 2022 ஏப்ரல் அக்டோபர் வரை ரூ.9,727 கோடியும் ஈட்டப்பட்டது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.