விஜய் 67ல் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது படத்தின் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.