
விடுபட்ட 41 பேருக்கு விருது வழங்கிய அமைச்சர்
2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் 4ம் தேதி கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் 255 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் பல திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அந்த விழாவில் விடுபட்ட 41 கலைஞர்களுக்கு நேற்று தலைமை செயலகத்தில் விருது வழங்கப்பட்டது, செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வழங்கினார்.

இயக்குனார்கள் வெற்றி மாறன், சேரன், நடிகர்கள் கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், பாடகி சின்மயி, பாடலாசிரியர் யுகபாரதி, நடிகை ஆனந்தி, குயிலி உள்பட41 பேர் பெற்றுக் கொண்டனர். சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரகுமான், சூரி ஆகியோர் சார்பில் மற்றவர்கள் பெற்றுக் கொண்டனர். சாதனை கலைஞர்கள் பாலுமகேந்திரா, பாலமுரளி கிருஷ்ணா, பிறைசூடன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதை அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.