வீட்டிற்குள் தம்பதி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை..!

கோவில்பட்டியில் வீட்டிற்குள் கணவன்-மனைவி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி-பரணிசெல்வி தம்பதியருக்கு மனோஜ்குமார் என்ற மகனும், உமாமகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். வீடு கட்டியது தொடர்பாக  கணவன் – மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலையில் தம்பதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.