ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: துன்பங்கள் தொல்லைகளை அழிக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்; நீங்களும் சங்கல்பிக்கலாம்!

‘ஓம் சுதர்ஸனாய வித்மஹே.

மஹா ஜ்வாலாய தீமஹி

தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:’

மனதால் தியானித்தாலே மகத்தான வரங்களை அளிப்பவர் ஸ்ரீசுதர்சனர். தீமைகளை அழிக்கும் திருமாலின் திருக்கரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீசக்கரம், செல்வ வளங்களையும் அளிக்க வல்லது என்று புராணங்கள் கூறுகின்றன. சிவந்த மாலைகளால் சோபிப்பவரும், செம்மை சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களை உடையவரும், ஒளி வீசும் ரத்தினங்களால் ஆன மகுடத்தைத் தரித்தவரும், தீயவர்களை அடக்கி, நலலவர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான,ஸ்ரீசுதர்ஸனர் வரப்பிரசாதி என்றும் போற்றப்படுகிறார். சுழலும் வல்லமையை அளிக்க சூர்ய பகவான் இவரைப் போற்றி தியானம் செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

வேதாந்த தேசிகரின் சுதர்சனாஷ்டகமும், க்ஷோடசாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். சக்கரத்தாழ்வாருக்கென்று தனித்த விசேஷமான ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை விகசை என்ற முனிவரால் உண்டாக்கப்பட்டவை என்கிறது புராணம். அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார், முக்கண் தாங்கி ருத்ர ரூபமாகவும், பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தியும் காட்சியளிப்பார். இவரை வழிபடுவதால் எல்லா பிறவியிலும் உண்டான பாவங்கள், எதிரிகளால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். வாழ்நாள் முழுக்க அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும்.

சுதர்சன ஹோமம்

ஸ்ரீஅனந்தன் எனும் நாகம், ஸ்ரீகருடன், ஸ்ரீசுதர்ஸனம் இம்மூன்றும் திருமலை கணம் கூட பிரியாது, அவரைத் தொழும் நித்யசூரிகள் என்று வைணவம் போற்றும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கிச் சுற்றி வழிபட்டால், நால்வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எண் திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். அதனால் 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீசுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை சுக்ல யஜுர் வேதத்தால் புகழப்படுகிறது. மானிடர், ரிஷிகள், தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர் சுதர்சனர். ஸ்ரீவிஷ்ணு எல்லா அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை தர்ப்பையாக, நாகமாக, வில்லாக,ஸ்ரீசக்கரமாக உருமாறி நடத்தியவர் ஸ்ரீசுதர்ஸனம். உலக இயக்கத்திற்கே ஆதாரம் மகாசுதர்ஸனமே’ என்கின்றனர் பெரியோர்கள். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன வழிபாடு கெட்ட கனவு, சித்தபிரமை, மனோவியாதி, வீண் அச்சங்கள், நஷ்டம், கவலை, விபத்துக்கள், அகால மரணம் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது. கண்கண்ட தெய்வமான சுதர்சனரை ஆராதிக்கும் வைபவத்தில் முதன்மையானது ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் குடும்ப மற்றும் சுற்றத்தார் நலனுக்காக இறையானூர் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் சிறப்பு ஸ்ரீசுதர்சன மஹாஹோமம் சுதர்சனருக்கு உகந்த திருநாளான 20.10.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்த உள்ளோம். சக்திவிகடன் – ஆதிகேசவ கோயில் நிர்வாகம் இணைந்து வழங்கும் மகாசுதர்சன ஹோமம், திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இறையானூர் ஶ்ரீஆதிகேசவ பெருமாள்

ஶ்ரீமந் நாராயணனின் திவ்ய நாமங்களில் ஒன்று ‘கேசவன்’. பன்னிரு நாமங்களில் இதுவே முதன்மையானது. ஶ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இது 23-வது திருநாமம். கேசி அல்லது கேஸிஹா என்ற அசுரனைக் கொன்றதால் விஷ்ணு பகவான் கேசவன் என்றானார் என்று விஷ்ணு புராணம் சொல்லும். க-பிரம்மா, அ- விஷ்ணு, ஈச – சிவன் ஆகிய மூவரின் அம்சமே கேசவன் என்றும் ஆன்மிகம் சொல்கிறது.

அழகிலும் அருள்வதிலும் நிகரில்லாத பெருமை கொண்ட கேசவன், தன்னுடைய பக்தர்களைக் காப்பதற்காகக் கோபம் கொள்வதிலும் சமர்த்தன் என்று போற்றப்படுகிறார். ஆம், அவதாரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவர் கேசவன். அதனாலே அவர் ஆதிகேசவன் என்ற அடைமொழியால் இந்தப் புண்ணிய பூமியில் பல தலங்களில் எழுந்தருளி உள்ளார்.

அப்படியான தலங்களில் ஒன்று திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் (இறைவனூர்). இங்கே கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீஆதிகேசவ பெருமாள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார். ஏன் அப்படி? திருமாலின் மீது அர்த்தமின்றி அசூயை கொண்டிருந்த நான்முகன், திருமாலைப் புறக்கணித்துவிட்டு சரஸ்வதி நதிக்கரையில் ஒரு யாகம் செய்தார். அதனால் கோபமுற்ற கலைவாணி, நான்முகனுக்கு உண்மையை உணர்த்த, அவர் நாவில் எழுந்து மந்திரத்தின் உச்சரிப்பை மாற்றிவிட்டார். மாறிய மந்திரச் சொல்லின் விபரீதத்தால் யாகத் தீயிலிருந்து கேசன் – கேசி என்ற அரக்கனும் அரக்கியும் தோன்றினர். இதனால் யாகம் அழிந்து நான்முகன் மறைந்து வாழும் நிலை உண்டானது.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

எவராலும் அழிக்க முடியாத வரம் பெற்ற இருவரையும் மடக்கி அவர்கள்மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணையாக்கிக் கொண்டு சயனித்தார் திருமால். இதனால் அவருக்கு கேசவன் என்ற திருநாமமும் உண்டானது என்கிறது புராணம். அசுரர்களுக்கு அஞ்சி தேவர்கள் ஒளிந்திருந்த திந்திரிவனத்துக்கு (திண்டிவனம்) வந்து காட்சி தந்தார் கேசவர். திருமால் கேசவனாக தேவர்களுக்கு முதன்முதலில் அருளிய தலம் என்பதால் அது இறைவனூர் என்றானது. திண்டிவனத்துக்கு அருகே சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்குஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் ஆதிகேசவர். இங்கே தனி சந்நிதியில் அபூர்வ கோலத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீசுதர்சனர்.

ஶ்ரீசுதர்சன மகா ஹோமம்

பொதுவாக இந்த ஹோமத்தில் ஶ்ரீசுதர்சன சடாக்ஷரி, ஶ்ரீசுதர்சன காயத்ரீ, ஶ்ரீசுதர்சன மாலா மந்திரம், ஶ்ரீநரசிம்ம மந்திரம், ஶ்ரீநரசிம்ம காயத்ரி, ஶ்ரீவிஷ்ணு காயத்ரி, ஶ்ரீலட்சுமி காயத்ரி, ஶ்ரீலட்சுமி மந்திரம், ஶ்ரீதன்வந்திரி மந்திரம், ஶ்ரீபாஞ்சஜன்ய காயத்ரி போன்ற பல மந்திரங்களையும் சொல்லிச் செய்வது உண்டு. இதனால் இந்த ஹோமத்தின் பலன் அளவிடற்கரியதாக விளங்குகிறது.

உன்னதமான இந்த ஹோம வைபவத்தில் வாசகர்களும் தங்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் உற்றார் உறவுகளுக்காகவும் சங்கல்பம் செய்து இறையருள் பெறலாம்!

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுதர்சன மகா ஹோமம்!

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.