டெஹ்ரான் ஈரானில், ‘ஹிஜாப்’ அடக்குமுறைக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டின் 19 வயதான பிரபல சமையல் கலை நிபுணர், பாதுகாப்பு படையினரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மேற்காசிய நாடான ஈரானில் பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் உள்ளன.
ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சமீபத்தில், ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஈரானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரானின் புரட்சிகர காவல் படை என்ற அமைப்பு போராட்டக்காரர்களை ஒடுக்கி வருகிறது. பாதுகாப்பு படையின் அடக்குமுறைக்கு இளைஞர்களும், இளம் பெண்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானை சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் மெஹர்ஷாத் ஷாஹிதி, 19, என்பவர், பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு படையினர்அவரை கண்மூடித்தனமாக தாக்கி, சமீபத்தில் கைது செய்தனர். காவலில்இருந்த போது அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதில், அவரதுதலையில் அடிபட்டு மண்டை உடைந்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அரசின் நிர்ப்பந்தத்தால்இவ்வாறு கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ‘ஷாஹிதி உடலில் எவ்வித காயமும் இல்லை’ என, அந்நாட்டின் தலைமை நீதிபதி அப்தோல்மெஹ்தி மவுசவி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து ஈரான் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement