தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியிலேயே முதன் முறையாக Lee Jihan அடையாளம் காணப்பட்டு, பின்னர் பிரபலமானார்.
ஹாலோவீன் கொண்டாட்டங்களில் Lee Jihan கலந்து கொண்டதாகவும், அதில் நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளதாக
தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே கூட்ட நெரிசலில் சிக்கி உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகர் ஒருவரும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகரான 24 வயது Lee Jihan என்பவர் மரணடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பிரபலமான Produce 101 என்ற தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியிலேயே முதன் முறையாக Lee Jihan அடையாளம் காணப்பட்டு, பின்னர் பிரபலமானார்.
பாடகர் Lee Jihan மரணத்தை, முக்கிய இசை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது.
அக்டோபர் 29ம் திகதி நடந்த ஹாலோவீன் கொண்டாட்டங்களில் Lee Jihan கலந்து கொண்டதாகவும், அதில் கூட்ட நெரிசலில் சிக்கி அவர் மரணமடைந்துள்ளதாகவும் குறித்த நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
மேலும், குறித்த தகவலை இதுவரை தங்களால் நம்ப முடியவில்லை எனவும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் தங்களால் மீள முடியவில்லை எனவும் தொடர்புடைய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பாடகர் Lee Jihan குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருப்பதாகவும், இதில் இருந்து மீண்டுவர அவர்களுக்கு இறைவன் துணிவைத் தரட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் போது சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் பெருந்திரளானோர் குறித்த பகுதியில் திரண்டிருந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 154 பேர் மரணமடைந்துள்ளனர். அத்துடன் 132 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இதில் 37 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
@reuters