மெல்போர்ன்,
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மழையால் போட்டிகள் நிற்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகளும் வலுவான அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடி வருவதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியல் சிக்கலில் உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது. ஒவ்வொரு அணியும் போட்டியில் உள்ளன.
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இனி நடைபெறும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பி பிரகாசமாக இருக்கும்.
இந்த நிலையில், இன்று 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் அயர்லாந்து அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் இந்த போட்டி அனல் பறக்கும்.