திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
#BREAKING | திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (01.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!#School #Leave #Rain #Chennai #Tamilnadu #Seithipunal pic.twitter.com/MR0zAIFeEk
— Seithi Punal (@seithipunal) October 31, 2022
கடந்த 29 ஆம் தேதி வடமேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலின் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
இன்று மாலை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் டிவிட்டர் செய்திக்குறிப்பு :
Since heavy rains are forecast for tomorrow, leave is hereby declared for tomorrow ie, for 1st November for all the schools in Tiruvallur district.
Alby John, Collector, Tiruvallur District.
— Collector, Tiruvallur (@TiruvallurCollr) October 31, 2022