வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மற்றும் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதால், விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.