கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 23 வயதான சரோன் ராஜ் என்பவர் படித்து வந்தார். இவர் தமிழக கேரளா எல்லையில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது நண்பருடன் காதலியை பார்க்க சென்ற நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அவர் மட்டும் சென்றுள்ளார். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவர் நண்பனிடம் வயிறு வலிப்பதாக கூற அவரை நண்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த அக்டோபர் 25ல் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சரோன் ராஜின் பெண் தோழி வேறொருவரை திருமணம் செய்து கொல்ல இவரை கொன்றது தெரியவந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த பெண் தோழி க்ரீஷ்மா தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். காவல் நிலையத்தில் கிரீஷ்மா அடைக்கப்பட்டிருந்த நிலையில், பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் லிக்விடை குறித்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிரமாக போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர். இந்த தற்கொலை ஒரு நாடகமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.