உலகம் முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் Whatsapp செயலி மிகவும் பிரபலமான முன்னணி செயலி ஆகும். இந்த செயலி உலகம் முழுவதும் மக்கள் தகவல் தொடர்பிற்காக அதிகம் பயன்படுத்தும் ஒரு செயலி.
செயலியை நீங்கள் அதிகம் பயன்படுத்தினால் தடை செய்யப்படுவீர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ‘Good Morning’ எனும் மெசேஜ் அதிகம் பயன்படுத்தினாலும் இவ்வாறு நிகழும். இவ்வாறு அதிகம் பயன்படுத்துவதை ஸ்பேம் என்று கருதி உங்களுக்கு தடை விதிக்கப்படலாம். மேலும் தேவையில்லாத தொடர்பில்லாத மெசேஜ் போன்றவற்றை அதிக அளவில் ஷேர் செய்தாலும் உங்களை தடை செய்வார்கள். இதன் முழு விவரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Whatsapp தடை காரணங்கள்
உங்களை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி whatsapp நிறுவனத்தால் தடை செய்யமுடிடியும். இது குறித்து தெரிவித்த அந்த நிறுவனம் “எண்களின் நிறுவன கொள்கைக்கு மாறாகவோ அல்லது அடுத்தவர்களுக்கு பிரச்சனை தரும் வகையில் பயன்படுத்தினால் தடை விதிக்கப்படும்” என்று Whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.
BSNL வாடிகையாளர்களுக்கு மகிழ்சயான செய்தி! புதிய தீபாவளி ரீசார்ஜ் ஆபர்கள் அறிமுகம்!
தற்காலிக தடை
இது குறைந்த காலத்திற்கு மட்டுமே விதிக்கப்படும் ஒரு தடை ஆகும். இதை சில மணிநேரங்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆனால் இதில் இருந்து நீங்க சில வழிமுறைகள் உள்ளன. நீங்கள் இந்த செயலியின் தடை செய்யப்பட்ட வெர்ஷன், அதிகப்படியான மெசேஜ், ஒரே தகவலை மீண்டும் மீண்டும் அனுப்புவது, பலர் உங்களை ஒரே நேரத்தில் தடை செய்தாலும் இந்த தற்காலிக தடை விதிக்கப்படும்.
நிரந்தர தடை
இந்த நிரந்தர தடை ஏற்பட்டால் நீங்கள் அந்த போன் நம்பரில் இருந்து இனி whatsapp பயன்படுத்தவே முடியாது. இதனை நீக்குவது என்பது முடியாத காரியம். இந்த நிரந்தர தடை விதிக்கப்பட முக்கிய காரணங்களாக இருப்பவை அதிகப்படையான தானியங்கி மெசேஜ், தடை செய்யப்பட்ட போன் நம்பர், தடை செய்யப்பட்ட நபர்களுடன் உரையாடுவது, அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புவது போன்றவை ஆகும்.
Twitter செயலிக்கு மீண்டும் திரும்பவேண்டுமா? நோ தேங்க்ஸ் சொன்ன Donald Trump
எப்படி தவிர்க்கலாம்
தேவையில்லாத தகவல்களை அனுப்புவதை தவிர்க்கவும். தானியங்கி தகவல்களை அதிக அளவில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. உங்களின் காண்டாக்ட் இல்லாதவர்களிடம் எதுவும் பேசாதீர்கள். அவர்களை தடை செய்தால் உங்களையும் தடை செய்யலாம்.அடுத்தவர்களின் போட்டோ வீடியோ, ப்ரொபைல் போன்றவற்றை பயன்படுத்தி அவர்களை போலவே அக்கௌன்ட் உருவாக்கவேண்டாம்.
தடை செய்ததை எப்படி அறிவது
உங்களை Whatsapp தடை செய்தால் உங்கள் போனில் உள்ள செயலியில் ‘This account is not allowed to use WhatsApp’ எனும் மெசஜ் இருக்கும். இதனை அவர்கள் எந்த ஒரு எச்சரிக்கை செய்திகளும் இன்றி அனுப்புவார்கள்.
தவறுதலான தடை
நீங்கள் தவறுதலாக தடை செய்யப்பட்டால் நீங்கள் Whatsapp நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி உங்களின் பிரச்னையை தெரிவிக்கலாம். அவர்கள் அனுப்பும் 6 டிஜிட் OTP எண்ணை பதிவு செய்தால் மீண்டும் நீங்கள் Whatsapp பயன்படுத்தலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்