பெரியகுளம் அருகே அதிமுக எம்.பி.க்கு சொந்தமான மின்வேலியில் சிக்கி சிறுத்தைப்புலி பலி.. ஆனால் கைது செய்யப்பட்டதோ ஆடுகளுக்கு கூடாரம் அமைத்தவர்..

தேனி: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழந்த விவகாரத்தில் ஆட்டுக்கு கிடை போட்டிருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம்கோம்பை வனப்பகுதி அருகே அதிமுக எம்.பி.யும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 27ம் தேதி அந்த தோட்டத்தை சுற்றிஇருந்த வேலியில் சிக்கிய 2 வயது சிறுத்தைப்புலியை மீட்க வனத்துறை முயற்சித்தது. அப்போது வனத்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுத்தைப்புலி … Read more

சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து… மாலுக்குள் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்பு

ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதஹனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்தின் … Read more

பெண் விவசாயியை தாக்க முயன்றதாக புகார் – அய்யாக்கண்ணு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மாவட்ட ஆட்சியர் முன்பு பெண் விவசாயியை தாக்க முயன்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று (30.09.2022) நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் பெண் விவசாயி கவுசல்யா ஆட்சேபம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சேபம் … Read more

12 பேரை கடித்துக் குதறிய பிட்புல் நாய் -தற்காப்புக்காக அடித்துக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

12 பேரை கடித்துக் குதறிய பிட்புல் நாயை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்காப்புக்காக அடித்துக்கொன்ற சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஒருவர் பிட்புல் ரக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து தப்பிய அந்த நாய் 5 கிராமங்களில் அலைந்துதிரிந்து 12 பேரை கடித்துக் குதறியது. டாங்கோ ஷா கிராமத்தில் இருந்து சுஹான் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை சுற்றிவந்த நாய், வழியில் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் ஆக்ரோஷமாக கடித்துக் குதறியது. … Read more

டில்லியில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட மாசு கட்டுப்பாடு சான்று கட்டாயம்| Dinamalar

புதுடில்லி: காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் புதுடில்லியில் வரும் 25ம் தேதி முதல் வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்ற முடிவு கடந்த 29ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டில்லியில் … Read more

தமிழுக்கு வரும் கன்னட வாரிசுகள்

கன்னடத்தில் அறிமுகமாகும் வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க நினைக்கிறார்கள். கர்நாடகாவின் பிரபல அரசியல்வாதி திலக்ராஜ் பல்லாலின் மகன் ஜாயித் கான் பனாரஸ் என்ற படத்தில் அறிமுகமாகிறார், இந்த படம் அதே பெயரில் தமிழிலும் வெளிவருகிறது. இதேபோல தற்போது இன்னொரு வாரிசும் தமிழுக்கு வருகிறார். கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி, ‛ஜூனியர்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் கிரீட்டியுடன், … Read more

மதுப்பாவனை வீழ்ச்சி

தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பிரச்சினைக்கு மத்தியில் நாட்டில் மது பாவனை கடந்த காலத்தில் 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கலால் வரி திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு பின்னர் (27)இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே குணசிரி கொரோனா தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு 22 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டதாக கூறினார்.

முத்தம் கொடுக்க முயன்ற வீரருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பாம்பு..!

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்த மகிழ்ச்சியில் அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடி வீரரின் உதட்டில் பாம்பு கொத்தியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ஷிவமொகாவின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வருவதற்குள், அந்த பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து அங்கு வந்த பாம்பு பிடி வீரர், ஒருவழியாக பாம்பை பிடித்துள்ளார். … Read more

"5ஜி சேவை மலிவு விலையில் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்!"- ஆகாஷ் அம்பானி

4G யை விட பல மடங்கு அதிவேகம் கொண்ட 5G க்கான ஏலம் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாரத் ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் போன்ற 4 முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது. மற்ற … Read more