வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.1ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

இதை செய்தால் தான் ரேஷன் பொருள்; தமிழக அரசு அதிரடி!

தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைதார்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் கீழ் இலவசமாகவும், குறைந்த விலையிலும் அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்டு பின்னர் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு, விற்பனை முனைய இயந்திரத்தின் வாயிலாக கைரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக பயோமெட்ரிக் … Read more

கவலை வேண்டாம்… அம்பானி உறுதி – அனைவருக்கும் 5ஜி!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தது. இலவச வாய்ஸ் கால்கள் மற்றும் மலிவான விலையில் டேட்டா என விரைவாகவே அனைவரின் வீட்டிற்குள்ளும் ஜியோ நுழைந்துவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் 5G இணையசேவையை பிரதமர் மோடி, இந்திய மொபைல் மாநாட்டில் (IMC) இன்று திறந்துவைத்தார். மேலும், 5G சேவைகள் சில நகரங்களுக்கு மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து நகரங்களுக்கும், அனைத்து வகை வாடிக்கையாளர்களுக்கும் 5G இணைய … Read more

’என்னை என் கட்சி கண்டுக்கல’… அதிமுகவை சாடிய போண்டா மணி; பதறி நலம் விசாரித்த ஜெயக்குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை துணை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை … Read more

பள்ளிகொண்டாவில் பிடிபட்ட ஹவாலா பணம் ரூ.14.70 கோடி கருவூலத்தில் இன்று ஒப்படைப்பு; கைதான 4 பேர் சிறையிலடைப்பு ; என்ஐஏ விசாரணை

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடி கூட்ரோடு அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு காரில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து பண்டல்களை சோதனையிட்ட போது அதில் கட்டுக்கட்டாக ₹2 ஆயிரம், ₹500, ₹100 பணக்கட்டுகள் 30 பண்டல்களாக கட்டப்பட்டிருந்ததும், இவற்றை … Read more

மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டடம் இடிக்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அதிர்ஷ்டவசமாக கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

சாலையில் திடீரென தீப்பிடித்த கார் – முன்கூட்டியே சுதாரித்ததால் உயிர்பலி தவிர்ப்பு

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. சென்னை தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே சாலையில் வந்து கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வர துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் சதீஷ் காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அவரும் காரில் பயணித்த பிரதீப் என்பவரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். 2 இந்நிலையில், சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி எரியத் … Read more

4ஜி கால்வாய் நீர் என்றால் 5ஜி ஆற்றுவெள்ளம் -5ஜி தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் 5ஜி தொலைத் தொடர்பு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 5 ஜி தொலைத் தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில், நாட்டின் மூன்று பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை 5 ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தன. இவற்றைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, 5 ஜி தொடர்பான … Read more

தொண்டர்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்| Dinamalar

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சிரோஹியின் அபுரோடு பகுதியில் நேற்று பா.ஜ., பேரணி நடந்தது. இதன் முடிவில் பிரதமர் மோடி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ராஜஸ்தான் வந்த மோடியை, முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே, மாநில பாஜ., தலைவர்கள் , நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேச மோடி மேடைஏறிய போது இரவு 10 மணியாகிவிட்டது. அங்கு, இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனை பின்பற்றுவதாக கூறிய மோடி மைக் … Read more