பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பிரபாஸ்

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா. பிரபாஸை சினிமாவுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. கிருஷ்ணம் ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பிரபாஸ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தனது பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்குவதாகவும், முதல் கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். இந்த விழாவில் … Read more

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக விவசாய அமைச்சர் தெரிவிப்பு

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் 29ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க … Read more

குழந்தைக்கு டிக்கெட் கேட்ட கண்டக்டர்.. ஆம்னி பஸ்சை சிறைபிடித்த உறவினர்கள்..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், தனது மனைவி சுகன்யா(33) மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தசரா திருவிழாவிற்கு தனது குடும்பத்தினர் ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திசையன்விளை செல்லும் ஆம்னி பஸ்சில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். நேற்று, தனது மனைவி, 3 வயது மற்றும் 4 வயது குழந்தைகள் மற்றும் உறவுக்கார பெண் ஆகியோரை அந்த பஸ்சில் முத்துகிருஷ்ணன் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் வந்த … Read more

குரங்குகளால் குலைநடுங்கிய கிராமம்; பொறிவைத்து பிடிக்கும் பணி தொடக்கம்!

மயிலாடுதுறை அருகேயுள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பொறிவைத்து பிடித்தனர். எஞ்சிய குரங்குகளைப்  பிடிக்கும் பணி தீவிரமாக  நடைபெற்று  வருகிறது. குரங்குகளால் குலைநடுங்கிய கிராமம் தஞ்சை: `இப்போ நகையும் போச்சு, பணமும் போச்சி!’ – குரங்குகளால் கதறும் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் மணவெளி தெரு, அக்ரஹாரம், கொல்லர் தெரு, தோப்புத்  தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் சுமார்  500 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு … Read more

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: சீமான் எழுப்பும் கேள்விகள்

சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வகை செய்யும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்எஸ்எஸ்ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் – ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ரூட்டு க்ளியர்:

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அண்மையில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற கொள்கையைப் பின்பற்றுவது என்று முடிவு எட்டப்பட்டது. அதன்படி, தான் வகித்துவந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கார்கே நேற்றிரவே காங்கிரஸ் இடைக்காலத் … Read more

“கல்வியைக் கொல்லாதீர்கள்” – ஆப்கன் தாக்குதலைக் குறிப்பிட்டு ரஷீத் கான் ட்வீட

காபூல்: ஆப்கனில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலைக் குறிப்பிட்டு “கல்வியைக் கொல்லாதீர்கள்” என்று கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காஜ் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.40-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலனவர்கள் தேர்வு எழுத காத்திருந்த மாணவிகள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து மாணவர் கூறும்போது, “எங்களுக்கு காலை … Read more

ஓசி வேண்டாம்… பூதாகரமாகும் விவகாரம்… கேள்வி கேட்க தொடங்கும் பெண்கள்…

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் இலவச பயணம் குறித்து சர்ச்சையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து கோவை மதுக்கரை பகுதியில் அரசு பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் பயணம் செய்தார். அப்போது அந்த மூதாட்டி, நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் செய்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில் மூதாட்டியை அப்படி செய்ய தூண்டிவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது … Read more

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவி: மல்லிகார்ஜூன கார்கே ராஜினாமா!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சித் தலைவராக உள்ளார். இந்த முடிவில் சோனியா … Read more

5G சேவை இந்தியாவில் அறிமுகம்! Jio மற்றும் Airtel பயனர்களுக்கு 5G சேவை எப்போது கிடைக்கும்?

5G இனைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற Indian Mobile Congress 2022 நிகழ்ச்சியில் துவக்கிவைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முதல்கட்டமாக இந்த 5G இனைய சேவையை முக்கிய இந்திய நகரங்களில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. இதில் ஜியோ நிறுவனம் இந்தியாவில் வரும் 2023 ஆம் டிசம்பர் மாதத்திற்குள் அணைத்து இடங்களிலும் 5G சேவையை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனமும் … Read more