98 டிஇஓ-க்கள் பணியிட மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள், மூன்று இணை இயக்குநர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் என 152 டி.இ.ஓ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அவைகளில் பணியாற்றும் வகையில் 98 மாவட்டக் கல்வி அலுவலர்கள் … Read more

இன்று அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய 3 முதலீட்டு மாற்றங்கள்..!

1) கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் பயன்பாடுகளில் வரும் மாறுதல்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாடுகளில் முக்கிய மூன்று மாற்றங்களை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி முதல் மாறுதலாக புதிய கடன் அட்டையை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினால் அந்த அட்டையை ஆக்டிவேட் செய்ய ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட்டை வங்கி வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும். கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டு பயன்பாடு; அக்.1 முதல் ரிசர்வ் வங்கி கொண்டு வரும் முக்கிய … Read more

“தோனியை போல் என்னை வைத்து ஃபினிஷிங்…” –  ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தோனியை எனக்கு பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு என்னை பினிஷிங் இன்னிங்ஸ் ஆட சொல்லி இருக்கிறார்கள் என ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொண்டாடி வந்தது. இதற்காக கடந்த மாதம் தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு திமுக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் கடைசி நாளான நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். ட்விட்டர் ஸ்பேஸில் முதல்வர் ஸ்டாலின் … Read more

அண்ணாமலைக்கு கிடைக்கும் ரிப்போர்ட்… சீமான் கட்சிக்கு ஆபத்து? அக்.,12க்கு பிறகு சம்பவம்..!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். ஆளுங்கட்சிக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களில் அண்ணாமலையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கட்சியை விட அண்ணாமலை வேகமாக வளர்ந்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இரண்டு வாரப்பயணமாக கடந்த மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, அரசியல் தலைமை உள்ளிட்ட பயிற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள இருப்பதாகவும், ஈழ தமிழர்கள் உட்பட அமெரிக்க வாழ் தமிழர்களை அவர் சந்தித்து பேசவிருப்பதாகவும் பாஜக … Read more

5G சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி! இனி இந்தியா No 1!

இணைய சேவை என்பது தற்போது இந்தியாவில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அனைவரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணைய வசதிகளை பயன்படுத்துகிறார்கள். தற்போது இந்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் 5G இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் துவக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்ஹவினி வைஷ்ணவ், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல், வோடோபோன் குழுமத்தின் இந்தியா தலைவர் குமார் மங்களம் … Read more

சிவாஜி ஓவர் ஆக்டிங்கா… இயக்குநர் மகேந்திரன் சொன்ன பதில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முகங்களில் முக்கிய முகமாக இருந்தவர் சிவாஜி கணேசன். நாடகங்களில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர் சினிமாவில் கோலோச்சுவதற்கு அவரது நடிப்பு பெரிதும் உதவியது. தனது முதல் படமான பராசக்தியில் நடிப்பையும், கலைஞர் கருணாநிதியின் வசனத்துக்குரிய சரியான பாவனைகளையும் வைத்து அசத்தியிருந்தார். அன்றிலிருந்து தமிழ் சினிமா நடிகர்கள் பராசக்திக்கு முன் பராசக்திக்கு பின் என தங்களை வகுத்துக்கொண்டனர்.  நம் அன்றாட வாழ்விலேயே கூட யாரேனும் நம்மிடம் நடிக்கிறார் என்றால் “இவரு பெரிய சிவாஜி” என கூறும் … Read more

ஓசி டிக்கெட் விவகாரம்: மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை மாவட்ட எஸ்பி தகவல்

கோவை: அரசு பேருந்தில் ஓசி பயணம் செய்ய மாட்டேன் என கூறிய மூதாட்டி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  அந்த மூதாட்டி மீது எந்த வழக்கும் பதிவும் செய்யப்படவில்லை மற்றவர்கள்மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாரயணன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு சென்ற அரசு இலவச மகளிர் பேருந்தில் ஏறிய துளசியம்மாள் என்ற மூதாட்டி, தனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம், காசை … Read more

தமிழகத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காலூன்ற விடக்கூடாது; மாதர் சங்க நிர்வாகி வலியுறுத்தல்

கடலூர்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில 16 ஆவது மாநாடு கடலூரில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளாக நேற்று பொது மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநில தலைவர் வாலண்டினா தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே துவக்க உரையாற்றினார். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வாழ்த்தி பேசினார். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்தவர்கள் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே பேசியதாவது: … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்: ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்

டெல்லி: 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தபடும் எனவும் 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளுக்கு 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.