மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தனியார் பள்ளி வேன் உதவியாளர் போக்சோவில் கைது

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி வேன் உதவியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். சிறுமி தினமும் டிராவல்ஸ் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக … Read more

5 கேரள ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு ; PFI அச்சுறுத்தலா?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த 5 ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. PFI-ஐ மத்திய அரசு தடை செய்தததை தொடர்ந்து, கேரளாவில் உள்ள RSS தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனத் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பணியகம் (IB) ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில், தென் மாநிலத்தின், 5 RSS தலைவர்களுக்கு “Y” பிரிவு … Read more

எதிர்நீச்சல் சீரியல் குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த இயக்குநர்

எதிர்நீச்சல் தொடர் அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக போட்டோகிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி சொல்வதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில், அண்மையில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில், 'படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்? இது போன்று இப்போதும் நடக்கிறதா?' என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்துள்ள திருசெல்வம், 'இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் நடந்து … Read more

புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் உருவாக்கிய தருணத்தை நாசா விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட திகிலூட்டும் காணொளியை வெளியிட்டுள்ளது. இயான் புயல் அந்த அளவில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பேரின் வீடுகள் புயலில் தூக்கி வீசப்பட்டது. 2.6 மில்லியன் வீடுகள் மற்றும் தொழில் செய்யும் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கினர். பல பேர் உடைமைகள் இழந்து வீடுகளை இழந்து நகரங்களை விட்டு வெளியேறியனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்பட்ட … Read more

நடிகர் கே.பாக்யராஜ் நீக்கம்.. கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு..!

நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை பரப்பியதாக கூறி, நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தல் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என … Read more

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் விவகாரத்து முடிவா? வதந்திகளுக்கு அவர்களின் பதில் இதுதான்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இருவரும் தங்களது கரியரில் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர். இதனால் அடிக்கடி தீபிகா படுகோனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் படப்பிடிப்பிலிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் மும்பை வீட்டிலிருந்த போது இரவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். … Read more

கலை உள்ள வரை சிவாஜி கணேசன் புகழ் நிலைத்து நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலை உள்ள வரை சிவாஜி கணேசன் புகழ் நிலைத்து நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ” ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். நடிப்புக் கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழுபவர் நடிகர் திலகம்! பேரறிஞர் அண்ணா எழுதிய … Read more

ஸ்வீடனில் உள்ள வாகனத்தை டெல்லியில் இருந்து இயக்கிய பிரதமர் மோடி: வீடியோ

புதுடெல்லி: ஸ்வீடனில் உள்ள வாகனத்தை டெல்லியில் இருந்து இயக்கி உள்ளார் பிரதமர் மோடி. தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அவர் ரிமோட் வழியாக காரை இயக்கி இருந்தார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, காரை விர்ச்சுவலாக … Read more

அண்ணாமலை அமெரிக்க பயணம்: பின்னணி என்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அக்டோபர் 12ஆம் தேதி அவர் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சி நாங்கள்தான் என பாஜகவினர் கூறி வரும் நிலையில், நாள்தோறும் மீடியாக்களை சந்தித்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் அண்ணாமலை, திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும், பாஜக மேலிடத்தின் அனுமதியை பெற்று அவர் அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

ஆடம்பரமான விருந்துதான் ஆனாலும்… பொன்னியின் செல்வனுக்கு முதல் நெகட்டிவ் ரிவ்யூ கொடுத்த நடிகை

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் நேற்று வெளியானது. படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்க தொடங்கின. பலர் குடும்பத்துடன் சென்று முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடிவருகின்றனர்.  மேலும், நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி மணி கலக்கியிருக்கிறார் … Read more