தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர்

ஈரோடு: தீபாவளி பண்டிகையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர்  தெரிவித்தார். ஈரோட்டில் முகாமிட்டுள்ள அமைச்சர் நாசர், அங்குள்ள  ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் ஆலையின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பால்வளத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்றவர்,.  ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் … Read more

அரசு பேருந்தில் ஏறி தகராறு!: திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கோவை மூதாட்டி, அதிமுக பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கோவை மூதாட்டி, அதிமுக பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் ஏறி ஓசி டிக்கெட் வேண்டாம் என்று நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என்று நடத்துனரிடம் மூதாட்டி தகராறு செய்த வீடியோ வெளியானது. அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது. வேண்டுமென்றே … Read more

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த பாலவல்துறை அமைச்சர் 2 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இன்று கருட சேவை நடைபெற உள்ளதையொட்டி திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

திருமலை: இன்று கருட சேவை நடைபெற உள்ளதையொட்டி திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிப்பால் திருமலையில் உள்ள அனைத்து இடங்களும் வாகனங்களால் நிரம்பியுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தில்: போலி மருத்துவரா…? பொதுமக்கள் புகார் – போலீசார் விசாரணை

சத்தியமங்கலம் அருகே கிளினிக் நடத்தியவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவமனை நடத்திய இருவரை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூரைச் சேர்ந்த இருவர் டாக்டர் எனக் கூறி அப்பகுதியில் மருத்துவனை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் டாக்டர் மற்றும் உதவியாளர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் … Read more

ஆர்.எஸ்.எஸ் 3 முறை தடை செய்யப்பட்ட வரலாறு என்ன?

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னை, ஆவடி, சேலம், திருப்பூர், மதுரை, கோவை என மாநகர பகுதிகளில் மற்றும் தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்த நிலையில், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, … Read more

ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம்.. எப்போது அமலாகிறது தெரியுமா..?

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க ‘பாஸ்டேக்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்ற வங்கிகள் மூலம் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வாகனங்கள் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கிக் கணக்கில் … Read more

“அண்ணன் தம்பிகளாகப் பழகும் நம்மிடையே பகைமையை உண்டாக்குகிறார்கள்" – துரை வைகோ காட்டம்

ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் துரை வைகோ, பெரம்பலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். “மாமனிதன் வைகோ என்கிற படம் திருச்சியில் திரையிடப்பட்டுள்ளது. பெரம்பலூர், கோவை தென் மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த இயக்கத்திற்காக உயிர் விட்டவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். இந்த படம் அவர்களுக்குச் சமர்ப்பணமாக அமையும். துரை வைகோ தேச பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் பா.ஜ.க-வுடன் … Read more

மழைநீர் வடிகால் பணி | அயனாவரம் – போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம்

சென்னை: மழை நீர் வடிகால் பணி காரணமாக அயனாவரம் – போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக அயனாவரம். கொன்னூர் நெடுஞ்சாலையில் போர்ச்சுகீஸ் சாலை சந்திப்பில் இன்று (அக்.1 ஆம் தேதி ) இரவு 11 மணி முதல் நாளை (2 ஆம் தேதி ) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதன்படி … Read more