அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு 

கடலூர்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அதிகாலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன் (52). நேற்றிரவு (செப்.30) இவர் புதுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்றார். ரயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்த போது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென அதிக அளவில் வியர்த்து, உடல் சோர்வும் … Read more

ஓசி- யை விரும்பாத பாட்டி மீது வழக்கு..? இதற்கு யார் பொறுப்பு..?

கோவையில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சலுகை இருந்தும்கூட ” நான் ஓசியில போக மாட்டேன்” என்று ஒரு பாட்டி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சில நாட்களுக்கு முன்பு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்து திட்டத்தை இலவசம் என்று சொல்லாமல் ”ஓசி” என குறிப்பிட்டார். அதற்கு எதிர்வினையாற்றவே அந்த மூதாட்டி அவ்வாறு செய்தததாகவும் சொல்லப்பட்டது. … Read more

ஓசி பயணம் வேண்டாம் என பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு!

கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணம் செய்த போது ஓசி பயணம் வேண்டாம் என கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இந்த வீடியோ காட்சிகளை அதிமுக உறுப்பினராக பிரத்திராஜ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், திமுகவினர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர்.  விசாரணையில் அதிமுகவை சேர்ந்த பிரத்திவ்ராஜ் (40), மதிவாணன் (33), விஜயானந்த், மற்றும் மூதாட்டி துளசியம்மாள் ( 68) ஆகிய … Read more

கெயில் நிறுவனத்துக்கு அனுமதி: விரைவில் சென்னை, கோவையில் குழாய் மூலம் எரிவாயு சப்ளை…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை யமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம், எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணையமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகஅரசு தற்போது  கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் … Read more

நீட் தேர்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு புரிதல் இல்லை: பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ராணிப்பேட்டை: நீட் தேர்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு புரிதல் இல்லை என பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது எனவும் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டிற்கு தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது எனவும் அதற்க்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் ஆன்லைன் விளையாட்டால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது, அதற்க்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  

தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை டெல்லியில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 5ஜி தொலைத்தொடர்பு சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் நாட்டின் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 5ஜி இணையத்தின் முன்மாதிரியை காட்சிபடுத்தி இருந்தன. இவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடி … Read more

வலிமை, பீஸ்ட் படத்தை தொடர்ந்து முதல்நாளிலேயே இத்தனை கோடிகளா? – ‘பொன்னியின் செல்வன்’ வசூல்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல்நாளிலேயே 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. அமரர் கல்கியின் வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை அதேபெயரில் திரைப்படமாக எடுத்துமுடித்துள்ளார் மணிரத்னம். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில். நேற்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. … Read more

புதுச்சேரி: பொதுமக்களின் தொடர் புகார் எதிரொலி-55 கடன் செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதாக கூறி மக்களை அவதிக்குள்ளாக்கிய 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ளவர்களை குறிவைத்து, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கடன்பெறும்போது மிகவும் எளிமையான நடைமுறை என ஆசை வார்த்தைக் கூறி கடன் பெற்ற பொதுமக்களிடம், அதன்பின்னர் அதிக வட்டி, எந்த அறிவிப்பும் இல்லாத … Read more

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும்

உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு நேற்று (30) முற்பகல் மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை கவனத்திற்கு கொண்டு … Read more