ஈரானில் வலுக்கும் போராட்டம்: காவல் நிலையம் மீது பயங்கர தாக்குதல்

ஈரான் சமீபத்திய செய்திகள்: ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஈரான் அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மாகாண ஆளுநர் ஹொசைன் மொடரேஸ் கியாபானி தெரிவித்துள்ளார். காவல் … Read more

இந்தியாவில் முதன்முதலாக 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

தலைநகர் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டின் தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 5ஜி … Read more

சதுரகிரி கோவிலுக்கு செல்லக் கூடாது.. வனத்துறை போட்ட திடீர் உத்தரவு..!

சாப்டூர் வனச் சரகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே இந்தக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா சிறப்பாக … Read more

“பட்டியலின மருத்துவர் தொட்ட உடல்…" – இறந்தவர் உடலை வாங்க மறுத்த கிராமம் – சாதியின் கோர முகம்!

உலக பண்பாடுகளுக்கு முன்னுதாரணம் இந்தியா என பெருமை பேசும் நிலையில், ஒவ்வொரு 10 நிமிடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நிகழ்த்தப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். அது போன்ற ஒரு கோர சம்பவம் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. ஒடிசா மாநிலம், பார்கர் மாநிலத்தில் பாதம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முச்சுனு எனும் கூலித் தொழுலாளி 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார். காவல்துறை இந்த நிலையில். அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. … Read more

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் சிவாஜிகணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினா். இதேபோல், தமிழ்நாடு … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது சரியா, தவறா?

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இந்த சட்டத் திருத்தம் செல்லுமா, செல்லாதா என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி அல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு … Read more

அமைச்சர் மூர்த்திக்கு சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்: நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா?

உலை வாயை மூடி விடலாம் ஊர் வாயை மூட முடியாது, எடப்பாடியார் ஆடம்பர திருமணத்தைப் பற்றி பேசியதில் என்ன தவறு உள்ளது, அமைச்சர் மூர்த்தியிடம் நேருக்கு நேராக விவாதம் செய்ய தயார் என்று கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். தனது இல்லத் திருமண விழாவை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு காட்டமாக பதிலளித்தார் அமைச்சர் மூர்த்தி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். “கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரை, சிவகாசியில் நடைபெற்ற … Read more

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்: எந்த நகரங்களுக்கு முதலில் கிடைக்கும்?

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. சுமார் 7 நாட்கள் நடைபெற்ற ஏலம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72,000 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 … Read more

Bigil Gayathri Reddy: திடீரென காதலரை கரம்பிடித்த விஜய் பட நடிகை!

பிகில் படத்தில் மாரியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் நடிகை காயத்திரி ரெட்டி. இதன் மூலம் பிரபலமான காய்த்திரி, கவின் நடிப்பில் வெளியான லிப்ஃப்ட் படத்தில் ஃபிளாஷ் பேக் கதையில் நடித்தார். தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி ரெட்டி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மாடலாகவும் இருந்து வருகிறார் நடிகை காயத்ரி ரெட்டி. Ponniyin Selvan1: சோழ பெண்களுக்கு கற்பு இல்லையா? பொன்னியின் செல்வன் குறித்து பயில்வான் … Read more

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்! எதற்காக?

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாகக்  கடந்த ஜூலை 22-ம் தேதி, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். அதோடு சில யூடியூப் சேனல்களுக்கும் இதுகுறித்து பேட்டி அளித்திருந்தார். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும்,  சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு … Read more