பொன்னியின் செல்வன்: "ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது!"- மீனாவின் வைரல் பதிவு

குழந்தை நட்சத்திரமாக ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீனா. ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமானவர். அவரது ரசிகர்களால் கண்ணழகி எனக் கொண்டாடப்பட்டவர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவைத் தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வந்தார். இதனிடையே சமீபத்தில் தன் கணவனை இழந்த மீனா அதிலிருந்து தற்போது மீண்டுவருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் … Read more

தீபாவளியையொட்டி ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு: அமைச்சர் நாசர்

ஈரோடு: தீபாவளியையொட்டி ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்த பின் அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் ஆவின் தீபாவளி விற்பனை ரூ.53 கோடியாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

டெல்லி: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். மதுரையில் நடக்க உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனவும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான கடன் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் சந்திப்பு: ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க கோரிக்கை..!!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். மதுரையில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் … Read more

அருணாச்சல பிரதேசத்தில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு| Dinamalar

புதுடெல்லி: ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான , நாகலாந்து ,அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் … Read more

ஆரம்பமே ‛சக்சஸ்' : ‛நடிப்பு சக்கரவர்த்தி' சிவாஜி கணேசனின் 95வது பிறந்ததினம்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நடிப்புக்கே சக்கரவர்த்தியாக, நடிப்புக்கே இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். இவரின் ஒவ்வொரு அங்கமும் இவரது நடிப்பை வெளிப்படுத்தும். அதனால் தான் நடிப்பு சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். சிவாஜி வேறு நடிப்பு வேறு கிடையாது. ஈருடல் ஓர் உயிர் என்பார்கள். அதுபோல் சிவாஜியும், நடிப்பும் ஒன்றே… அப்பேற்பட்ட மாபெரும் கலைஞனான சிவாஜி கணேசனின் 95வது பிறந்த தினமான இன்று அவரைப்பற்றி சற்றே திரும்பி … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு  30- 40கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

குட் நியூஸ்.. குறைந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை..!

இன்று முதல், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற/இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயித்து வருகின்றனர். அந்தவகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, சென்னையில் இன்று முதல், ரூ.2,045-க்கு … Read more

தொடரும் புகார்கள்… புறக்கணிக்கப்படுகிறார்களா 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்?!

மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளை அரசு நிர்வாகம் செய்தால் மட்டுமே பொது மக்களுக்குக் குறைந்த விலையில் தரமானதாகவும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. அவசரமாக்கப்பட்ட நகரத்தில் விபத்துகள் ஏராளம். மருத்துவமனை இல்லாத கிராமங்களில் மக்கள் தொலைதூரம் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். திடீரென மாரடைப்போ, பிரசவ வலியோ ஏற்பட்டால் வாகன வசதி உடனே கிடைப்பதில்லை. 108 ஆம்புலன்ஸ் இது போன்ற அவசரக்காலத்தில் … Read more

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 200-க்கு 200 பெற்று 7 பேர் முதலிடம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு, இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 200-க்கு200 தரவரிசை பெற்று 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு இளம்அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கு இளம்அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 6,980 இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. … Read more