உங்க ஆட்சியின் திட்டத்தை, இவங்க செயல்படுத்துவாங்க என, அப்பாவித்தனமா எதிர் பார்க்கிறீங்களே!| Dinamalar

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட, ‘அம்மா மினி கிளினிக்’குகள் தொடர்ந்து இயங்கியிருந்தால், தற்போது பரவலாக தொற்றும் சளி, இருமல், இன்புளுயன்சா காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை பெற, மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.இப்போது, ஆட்சியாளர்களுக்கு மினி கிளினிக்குகளின் அருமை தெரிந்துஇருக்கும். இதன் பிறகாவது, மூடப்பட்ட மினி கிளினிக்குகளை மீண்டும் துவக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. உங்க ஆட்சியின் திட்டத்தை, இவங்க செயல்படுத்துவாங்க என, அப்பாவித்தனமா எதிர் பார்க்கிறீங்களே! … Read more

2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய ஊழியர்கள்; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

லக்னோ, உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் … Read more

இந்தியா -தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் 'விற்றுத் தீர்ந்தன

கவுகாத்தி, தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி விட்டதாக அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வெளிப்படையான முறை கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது என்று அஸ்ஸாம் கிரிக்கெட் சங்கத்தின் (ஏசிஏ) செயலாளர் தேவஜித் சைகியா … Read more

ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா: ஜப்பான் கடற்பகுதியில் இன்று 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!

சியோல், வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து, பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வடகொரியா சனிக்கிழமை அன்று, இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது. என்று ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.அந்த இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே … Read more

ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி ,முன்பள்ளி பிள்ளைகளுக்காக காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நவம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் ,கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்கு பொதிக்கான தொகையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கூறினார். ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி முன்பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு வழங்கும் மாவட்ட வேலைத்திட்டம் … Read more

சுமார் 5 லட்சம் காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் தற்போது 4,82,264 காலி இடங்கள் உள்ளன. வேலை தேடுவோர் மற்றும் வேலை வழங்குவோரை ஒருங்கிணைக்கும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் துவங்கப்பட்டது. செப்டம்பர் 26, 2022-ன் படி, இந்த இணையதளத்தில் வேலை அளிக்க கூடியவர்கள் எண்ணிக்கை மட்டும் 2,01,633 ஆக உள்ளது. இவர்கள், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள கிட்டத்தட்ட 4,82,264 பணியிடங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்திருக்கின்றனர். … Read more

கைது செய்யப்பட்ட டி.டி.எஃப் வாசன்… காவல்துறையிடம் விளக்கம்… நடந்தது என்ன?!

கோவை யூ-ட்யூபர் டி.டி.எஃப் வாசன் சமீப காலங்களாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவுடன் கோவை சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பயணித்தார். ஜி.பி முத்து டி.டி.எஃப் வாசன் எச்சரித்தும் மாறாத டி.டி.எஃப் வாசன்… ஜி.பி.முத்துவுடன் அபாய பயணம்… பாய்ந்தது வழக்கு! இதுகுறித்து டி.டி.எஃப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால், கைது பயத்தில் வாசன் வீடியோ வெளியிடாமல் இருந்தார். இதையடுத்து போத்தனூரில் … Read more

சென்னை – நாகர்கோவிலுக்கு அதிகபட்சமாக ஏ.சி. இல்லாத ஆம்னி பேருந்தில் ரூ.2,820 கட்டணம்

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டண பட்டியலை பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத ஆம்னி பேருந்தில் இருக்கைக்கு ரூ.2,327, படுக்கைக்கு ரூ.2,820 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விழாக் காலங்களில், ஆம்னி பேருந்துகளில் வரன்முறையின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 27-ம் தேதி ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘‘மக்களுக்கு … Read more

கர்நாடகாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை

பெங்களூரு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸாரும் பொதுமக்களும் நடந்து சென்றனர். … Read more

பிக்பாஸ் தமிழ் போட்டியாளராகும் பிரபல நடிகையின் தம்பி; பறவை பெயர் கொண்ட விஜய் டிவி பிரபலம்

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகினாலும், பிக்பாஸ் சீசன் 6 தமிழுக்கு மீண்டும் தொகுப்பாளராக களமிறங்கிவிட்டார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்காக அவரின் புரோமோ வீடியோவையும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னர் சீசன்களைவிட இந்த சீசன் பிரம்மாண்டமாகவும், புதிய உயரத்தை எட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஜய் டிவி, அதற்கேற்ப போட்டியாளர்களை … Read more