சென்னையில் 15 நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த தடை!

சென்னை: சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் திருமாவளவனின் எதிர் மனித சங்கிலி அறிவிப்பு போன்றவற்றால் தமிழ்நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகஅரசு எந்தவொரு பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு  நவம்பர் 6ந்தேதிக்கு  … Read more

உலகக் கோப்பை தொடருக்கான அணியில் பும்ரா நீடிக்கிறார்: சௌரவ் கங்குலி தகவல்

மும்பை: காயம் காரணமாக அவதியுறும் பந்துவீச்சாளர் பும்ரா, 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் நீடிக்கிறார் என சௌரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். பும்ரா  உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா செல்வாரா என்பது 3 நாட்களில் தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3,805 பேருக்கு கொரோனா… 26 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக குறைந்தது. * புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

சென்னை: பிரபல கஞ்சா வியாபாரியை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் – போலீசார் விசாரணை

புளியந்தோப்பு பகுதியில் பொதுக்கழிப்பறை சுவற்றில் அமர்ந்து பேசிகொண்ட இருந்தபோது, பிரபல கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் என்ற சேட்டு என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை சுவற்றின் மீது நேற்று இரவு நண்பர்களுடன், பிரபல கஞ்சா வியாபாரி கார்த்திகேயன் என்ற சேட்டு என்பவர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமார் … Read more

"ஜெயிலுக்கு போறேன்.. நானும் ரவுடி தான்.. " – ஒரு நாள் தங்க வாடகை ரூ. 500!

ஒருவருடைய ஜாதகத்தில் கட்டம் சரியில்லாதவர்கள், கண்டிப்பாக சிறைக்குச் சென்றே தீர வேண்டும் என்ற விதி உள்ளவர்கள் , அதற்கான பரிகாரமாக சிறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தராகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. வித்தியாசமான சுற்றுலா அனுபவங்களை பெற மக்கள் விரும்புகிறார்கள். அதன்படி, சிறை சுற்றுலா தான் இப்போதைய ட்ரெண்ட். ரூ.500 செலுத்தினால், சிறைக் கைதியை போல ஒருநாள் உள்ளே இருக்கலாம் என சில மாநிலங்களில் சிறைதுறை  அறிவித்தவுடன் தினமும் பல விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. உத்தராகாண்ட் போலவே கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிறை … Read more

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன்னணி நடிகர்கள் உதவ வேண்டும் – போண்டா மணி உருக்கம்

உடல் நலம் பெற்று மீண்டும் நடித்து பொதுமக்களை சிரிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படுவதாக திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி தெரிவித்தார். இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்பட காமெடி நடிகர் போண்டாமணி சிகிச்சை முடிந்து போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சத்திற்கான தொகையை வழங்கி உடல் நலம் … Read more

அன்னிய செலாவணி சட்ட விதிமீறல்: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

புதுடெல்லி, சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் ‘ரெட்மி’ என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெமா சட்டப்படி, இந்த உத்தரவுக்கு உரிய உயர் … Read more

தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் தங்கம் வென்று அசத்தல்

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக … Read more

உக்ரைன் பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைப்பு – ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

நியூயார்க், உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more