தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்01ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில்சிலஇடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் … Read more

இதயம் பலவீனமானவங்க இந்த வீடியோவை பார்க்காதீங்க ..!!100 குழந்தைகள் உடல் சிதறி பலி!! பதைபதைக்கும் வீடியோ

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் காபூலில் உள்ள காஜ் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத மையத்திற்கு வந்த … Read more

Doctor Vikatan: தீக்காயத்துக்கு கட்டுப்போடுவது சரியா?

Doctor Vikatan: என் மகள் சமீபத்தில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை காலில் ஊற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய் தடவினால் சரியாகிவிடும் என விட்டுவிட்டோம். ஆனால் பெரிய அளவில் கொப்புளம் வந்துவிட்டது. பயந்துபோய் அருகில் ஒரு மருத்துவரிடம் சென்றோம். அவர் கொப்புளத்தை உடைத்துவிட்டு மேல்தோலை வெட்டி எடுத்துவிட்டு மருந்து வைத்து கட்டுப்போட்டார். மூன்று நாள்களுக்கு தினமும் கட்டு போட்டே வந்தார். பார்ப்பவர் அனைவரும் தீக்காயம், சுடுநீர் காயத்துக்கு கட்டுப்போட்டால் ஆறாது என அச்சுறுத்தினார்கள். பிறகு அனுபவம் வாய்ந்த வேறு … Read more

சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் 7 சோழர் கால வெண்கல சிலைகள் மீட்பு: 15-ம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சாவூர் ஓவியங்களும் பறிமுதல்

சென்னை: சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 சோழர் கால சிலைகள், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 தஞ்சாவூர் ஓவியங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரது வீட்டில் விலை மதிப்பற்ற சோழர் கால வெண்கல சிலைகள், பழங்கால தஞ்சாவூர் ஓவியங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து … Read more

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக 8 மாநிலங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி : நாடு முழுவதும் 8 மாநிலங்களில் சிபிஐ நடத்திய சோதனையில் பெருமளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்டர்போல், போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மாநில போலீஸார் உதவியுடன் சிபிஐ இந்த சோதனையை நடத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகத்திற்குரிய 6,600 பேரின் நடவடிக்கைகளை ஆராயும் வகையில் இந்த … Read more

சட்டவிரோத இணைப்பு விவகாரம் | ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சட்டவிரோத இணைப்பு விவகாரம் குறித்து நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இதனை இந்தியா புறக்கணித்துள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் ரஷ்யாவுக்கு … Read more

கடந்த வாரம் வெளியான புது படத்தின் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

சமீப காலமாக இளம் வயதினர் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக திரை பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையான ஒன்றாக அரங்கேறி வருகிறது.  தற்போது மாடல் அழகியும், இளம் நடிகையுமான அகன்ஷா மோகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையை சேர்ந்த மாடல் அழகியான இவர் பல விளம்பரங்களிலும், சில ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், ‘9 திருடர்கள்’ என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  தற்போது ஹிந்தியில் வெளியான சியா என்கிற … Read more

ஆளுநர் மாளிகை கொலு கண்காட்சி; பொதுமக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை வரும் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை இன்று முதல் வரும் அக்டோபர் 5ம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி … Read more

உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை ஒட்டி மாஸ்கோவில் கொண்டாட்டம்

மாஸ்கோ: உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை ஒட்டி மாஸ்கோவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. லுகான்ஸ்க்கிலும் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

டெல்லி: தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் எனவும் ராஜ்னீஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாக்கல் செய்திருந்த மனுவை அலகாபாத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.